என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவர்கள் படுகாயம்"
- தேனீக்கள் கூட்டம் படையெடுத்து, அங்கு நின்ற சுற்றுலா பயணிகளை விரட்டி விரட்டி கொட்ட தொடங்கியது.
- தேனீக்கள் கொட்டியதில் படுகாயம் அடைந்த 11 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ஊட்டி:
கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.
ஊட்டியில் பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிட்ட அவர்கள் அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்தனர்.
அங்கு இத்தாலியன் பூங்கா பகுதியில் பூத்து குலுங்கிய மலர்களை பள்ளி மாணவ, மாணவிகள் கண்டு ரசித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த தேன்கூடு களைக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து தேனீக்கள் கூட்டம் படையெடுத்து, அங்கு நின்ற சுற்றுலா பயணிகளை விரட்டி விரட்டி கொட்ட தொடங்கியது. கேரளாவில் இருந்து வந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்களை தேனீக்கள் கொட்டியது. இதனால் அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
மேலும் அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடி சென்று ஒளிந்து கொண்டனர்.
அப்போது சிலர் என்ன செய்வது என்று தெரியாமல் தேனீக்களிடம் இருந்து தப்பிக்க இத்தாலியன் பூங்கா பகுதியில் இருந்த குட்டையில் குதித்தனர். அங்கு தண்ணீரின் குளிர் தாங்க முடியாமல் சுற்றுலா பயணிகள் சத்தம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் தேனீக்கள் கூட்டம் அங்கிருந்து சென்றது. இதையடுத்து தேனீக்கள் கொட்டியதில் படுகாயம் அடைந்த 11 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து 11 பேரும் சொந்த ஊருக்கு திரும்பினர். இதற்கிடையே தேனீக்கள் இருந்த கூட்டை கலைத்தது யார் என்று தாவரவியல் பூங்கா நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
நாகை மாவட்டம் பிடாரி கோவில் தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் பாலாஜி (வயது 18). இவர் ஒரத்தநாட்டில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி இருந்து தஞ்சையில் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ என்ஜினீயரிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இன்று காலை பாலாஜியும், அவருடன் அதே கல்லூரியில் படிக்கம் காசவளநாட்டை சேர்ந்த கருணகரன் மகன் ஹரிஹரனும் ஒரே மோட்டார் சைக்கிளில் இன்று காலை கல்லூரிக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் ஒரத்தநாட்டை அடுத்த ஈச்சன் கோட்டை பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு லாரி மோதியது. இதில் பாலாஜியும், ஹரிஹரனும் படுகாயமடைந்தனர்.
இதுபற்றி பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் செல்வகுமார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரையும் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் அவர்களை மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிசசை அளித்து வருகின்றனர்.
இதுபற்றிய புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரியை பறிமுதல் செய்து டிரைவரை தேடி வருகின்றனர்.
தண்டராம்பட்டு:
தண்டராம்பட்டு அடுத்த சின்னையம்பேட்டை பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வரும் மாணவ, மாணவிகளை அழைத்து வர பள்ளியில் வேன் உள்ளது.
இன்று காலை வழக்கம் போல் பள்ளி வேன் மாணவர்களை அழைத்து வர சென்றது. வேனை தானிப்பாடி பகுதியை சேர்ந்த காமராஜ் (வயது 40). என்பவர் ஓட்டிச் சென்றார். வெப்பூர்செக்கடி, மலையனூர்செக்கடி, தானிப்பாடி ஆகிய பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது.
தானிப்பாடி சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. அப்போது வேனில் இருந்த மாணவர்கள் அலறி கூச்சலிட்டனர்.
இதில் வேன் டிரைவர் காமராஜ் (வயது 40). சவுந்தர்யா (5). மாலதி (6). சபிதா (7). வெற்றிவேல் (4). ரசிதா (5). சாலினி (7). உள்பட 7 பேர் காயமடைந்தனர்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களை மீட்டு தானிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
விபத்து பற்றி தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்று பதறியபடி ஆஸ்பத்திரியில் குவிந்தனர். விபத்து குறித்து தானிப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது கண்டப்பன் குறிச்சி. இங்கு தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இன்று காலை பள்ளிக்கு சொந்தமான பஸ் ஒன்று கிராம பகுதிகளுக்கு சென்று மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இருந்தனர்.
இதே நேரத்தில் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து வேப்பூருக்கு தனியார் பஸ் ஒன்று சென்றது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அந்த பஸ் விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூர் பஸ் நிறுத்தத்தில் நின்றது. பஸ்சில் இருந்து பயணிகள் சிலர் கீழே இறங்கினர்.
அப்போது அந்த வழியாக பள்ளி மாணவிகளை ஏற்றி வந்த பஸ் அங்கு நின்று கொண்டிருந்த தனியார் பஸ்சின் பின் பகுதியில் மோதியது.
இதில் மாணவ-மாணவிகள் பயணம் செய்த பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. உள்ளே இருந்த மாணவ-மாணவிகள் கூச்சல்போட்டு அலறினர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்சுக்குள் சிக்கி காயம் அடைந்த மதுமிதா (வயது 11), கவிப்பிரியன் (7), சிவசங்கர் (7), பூங்காஸ்ரீ, வேலமாயி (13), ஏழுமலை (10), புவனேஷ்வரி (13), நித்யா (5), வித்யா (11), கார்முகில் (4), தர்ஷினி (7), கோகுலகிருஷ்ணன் (3), சிவா (3), லோகேஷ் (4), சிவபாலன் (10) உள்பட 25 பேரை மீட்டனர்.
பின்பு அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் விளாங்காட்டூர் பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை பெரியநாயக்கன் பாளையம் ஜோதிபுரத்தில் பயனீர் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களின் வசதிக்காக கல்லூரி பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை அன்னூரில் இருந்து கல்லூரி பஸ் புறப்பட்டது. பஸ்சை சிறுமுகையை சேர்ந்த கருப்புசாமி ஓட்டினார். பஸ் லிங்காபுரம், இலுப்பநத்தம், ஆத்திக்குட்டை ஆகிய இடங்களில் உள்ள மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் புறப்பட்டது. ஆத்திக்குட்டையை கடந்து வந்தபோது ஒரு வளைவில் பஸ்சை டிரைவர் திருப்ப முயன்றார். அப்போது பஸ் ஸ்டேரிங் ஜாம் ஆகிவிட்டது. இதில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வயலில் கவிழ்ந்தது. இடிபாடிகளில் சிக்கிய மாணவ, மாணவிகள் அலறி சத்தம்போட்டனர்.
சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் 15 மாணவ- மாணவிகள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஆத்திக்குட்டையை சேர்ந்த பி.காம் முதலாம் ஆண்டு மாணவர் மது (18) என்பவருக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் படுகாயம் அடைந்த மற்ற மாணவ, மாணவிகள் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேட்டுப்பாளையம், கோவை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்